இந்த நடிகர்கள் தான் மாஸ்.! ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதிக்காத வளர்ந்து வரும் 6 நடிகர்கள்.

0
all actors
all actors

திரை உலகில் பொருத்தவரை நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் மோதும் போது ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வது வழக்கம் மேலும் யார் திரைப்படம் வசூலில் அதிகமானது விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது என்பதை சமூக வலைத்தளத்தில் செளியிட்டு மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றோர் படங்கள் வெளிவரும் பொழுது முட்டி மோதிக் கொள்வது வழக்கமாக இருக்கிறது ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்களை எல்லாவிதமான ரசிகர்களும் பார்த்து மகிழ்வது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை கொடுத்த நடிகர்களை பற்றி தற்போது பார்ப்போம் இந்த நடிகர்களின் திரைப்படங்களை மட்டும் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளாமல் படத்தை பார்த்து என்ஜாய் செய்து வருகிறார்கள். லிஸ்ட் இதோ.

  1. சியான் விக்ரம் “சேது” படத்தின் மூலம் தனது அசாதாரணமான திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துப் போட்டார்  தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் மட்டும் அதிக அளவில் இல்லாமல் இருக்கிறது இருப்பினும் இவரது திரைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் மற்றும் மக்களும் கண்டுகளித்து என்ஜாய் பண்ணுவது வழக்கம்.
  2. சிவக்குமார் குடும்பத்தில் சூர்யாவுக்கு அடுத்ததாக கார்த்தி சினிமாவில் உள்நுழைந்து தற்போது வெற்றி மேல் வெற்றி கொடுத்து வருகிறார். கைதி, சுல்தான் போன்ற சமீபத்திய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது மேலும் இவரது திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி பார்ப்பது வருகின்றனர்.
  3. பெரிய தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அவ்வப்போது ஆள் அட்ரஸ் காணாமல் போய்விடுகிறார் நடிகர் ஜீவா இருப்பினும் இவரது திரைப்படங்கள் அனைத்து ரசிகர்களும் குதுகலத்துடன் பார்ப்பது வழக்கம்.
  4. திரை உலகில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி தற்போது வித்தியாசமான திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இவரது படத்தை அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற அனைத்து தரப்பு ரசிகர்களும் தியேட்டரில் வந்து சந்தோஷத்துடன் பார்ப்பது வழக்கம்.
  5. ஹிந்தி, தமிழ் போன்ற அனைத்து தரப்பு மொழிகளிலும் சிறப்பாக நடித்து வருவர் மாதவன். தமிழில் சாக்லேட் பாயாக வந்த மாதவன் தற்பொழுது வித்தியாசமான மற்றும் சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதனால் இவரது திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ஒன்றுகூடி பார்ப்பது வழக்கம்.
  6. முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாக நடிப்பதால் இவர் பலதரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக இருக்கிறார் அதோடு வரை திரைப்படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடுவது வழக்கம்.