நான் சூப்பர் ஓவர் வீசினால் இந்த 2 பேட்ஸ்மேன்கள் ஆடக் கூடாது.! யார் யார் தெரியுமா.?

0

சமீப காலமாக லெக் ஸ்பின்னர் களில் பெயர் போனவர்களில் ஒருவர் சைனா மேன் குல்தீப் யாதவ் இவர் இடது கை லெக் ஸ்பின்னர் ஆவார் தற்பொழுது ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக ஆடி வருகிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லில் இவரது பவுலிங் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை இருப்பினும் இந்திய அணியில் தனது சிறப்பாக பந்துவீசி தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் சொல்லிக்கொள்ளும்படி சோபிக்கவில்லை அதன்பின்னர் அணியில் அவ்வப்போது ஒரு சில ஆட்டங்களில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சமீபத்தில் குல்தீப் யாதவ்விடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. ஐபிஎல்ளில் சூப்பர் ஓவரை நீங்கள் வீசினால் இந்த 2 பேட்ஸ்மேன்கள் ஆடாக் கூடாது என்று நினைப்பார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குல்தீப் யாதவ் சூர்யகுமார் யாதவ் எனது பந்தை சிறப்பாக ஆடுவார்.

ro-and-surya
ro-and-surya

எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக எங்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் அவர் லெக் ஸ்பின் அருமையாக ஆடக் கூடியவர் என்று எனக்கு நன்றாக தெரியும் அவர் எனது பவுலிங்கை நன்றாக ஆடுவார். அதேபோல ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஆகிய இருவரும் பந்து போடுவது கடினமான விஷயம் என மேலும் குறிப்பிட்டிருந்தார் இதனைப் பார்த்த ரசிகர்கள் உலகில் மிகப்பெரிய பினிஷேர் ஆனா தோனி பெயரையோ அல்லது மிகச் சிறந்த கோலி பெயரையோ குறிப்பிடாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது என கூறி வருகின்றனர்.