கே ஜி எஃப் படம் மாதிரி சியான் 61 இருக்காது.? மொத்த ரகசியத்தையும் கக்கிய இயக்குனர் பா ரஞ்சித்.!

எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் துணிந்து நடிக்கும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விக்ரம் இவர் கடைசியாக மகான் திரைப்படத்தில் நடித்தார் அதில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர ரெடியாக இருக்கின்றன. அது இப்படி இருக்க மறுபக்கம் நடிகர் விக்ரம் முதல் முறையாக பா ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அண்மையில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் கதை போன்று இந்த படமும் இருக்கும் என முதலில் பேசப்பட்டது.

ஆனால் தற்பொழுது இந்த கதை எதை மையமாக வைத்து உருவாக இருக்கிறது என்பது குறித்து பா ரஞ்சித் போட்டு உடைத்து உள்ளார். அதாவது கே ஜி எஃப்  திரைப்படத்தை காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். மேலும் கபாலி திரைப்படத்திற்கு பிறகு நான் கேஜிஎப் பற்றிய கதையைத்தான் படமாக்க நினைத்தேன் அந்த சமயத்தில் கேஜிஎப் படத்தை பற்றி கேள்விப்பட்டதும்.

அந்த ட்ரைலரை பார்த்தேன் அதில் சில விஷயங்கள் என்னுடைய கதைக்கேற்றவாறு ஒத்துப் போயிருந்தது. இதனால் படம் வெளிவரும் வரை நான் காத்திருந்தேன் பிறகு படம் வெளியானதும் பார்த்தால் எனது கதைக்கும் அதற்கும் சுத்தமாக சம்பந்தமில்லை.. கேஜிஎப் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் ஆனால் உண்மையில் கோளாறு சுரங்கத்தில் நடந்த நிகழ்வுகள் அங்கு இருந்த மக்களின் வாழ்கை பற்றி தெளிவாக கூறப்படவில்லை.

19ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தான் விக்ரம் 61 உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட உள்ளார் அதுவும் இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்றாக இருக்கும் எனவும் கூறி அதிர வைத்துள்ளார்

 

Leave a Comment