இந்த ஆண்டு தல பொங்கலும் கிடையாது தளபதி பொங்கலும் கிடையாது.! உதயநிதி பொங்கல்.. சர்ச்சையை ஏற்படுத்திய 48 வயது நடிகை..

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படி ஒன்றுடன் ஒன்று குறை சொல்லாத அளவுக்கு மோதிக் கொண்டு வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஆண்டு தல பொங்கலா? தளபதி பொங்கலா? என அடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு பாடத்தின் வசூல் நிலவரம் வெளியாகிய நிலையில் அஜித் ரசிகர்கள் இப்போ சொல் யார் நம்பர் ஒன் என்று என தளபதி ரசிகர்களை வம்பு இழுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி அவர்கள் இந்த ஆண்டு துணிவு பொங்கலும் கிடையாது வாரிசு பொங்கலும் கிடையாது ரெட் ஜாயிண்ட் பொங்கல் தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

அதாவது மேலிடத்து ஆசியுடன் தெனாவெட்டா டிக்கெட் 2000rs! பொங்கலுக்கு வசூலை குவிக்க போவது யார் தளபதியா? தல அஜித்தா? என்று கஸ்தூரியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு பதிலளித்த கஸ்தூரி சந்தேகமே வேண்டாம் இந்த பொங்கல் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் தான் என்று ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இந்த நிலையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் விஜய் அவர்கள் இருவரும் மறுபடியும் இந்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி 67 மற்றும் ஏ கே 62 படத்தின் மூலம் மோத  உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் அடுத்த வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

Leave a Comment