இந்திய அணி வெற்றி பெறக்கூடாது என நினைத்தவர்கள் என் அருகில் தான் இருந்தார்கள்.? உண்மையை உடைத்த ரவி சாஸ்திரி.

0
ravi-sastiti
ravi-sastiti

சிறந்த வீரர்கள் இருந்தால் மட்டும் ஒரு அணியை சிறந்த கிரிக்கெட் அணியாக மாற முடியாது. அனுபவமுள்ள பயிற்சியாளர் சிறந்த கேப்டன் பயிற்சியாளர் கேப்டன் போன்றவர்கள் செயல்பாடு தன்மை அவை சரியாக இருந்தாலே போதும் ஒரு அணியை வெற்றியாக மாற்ற முடியும். அதேசமயம் சிறந்த வீரர்களை எந்தெந்த இடத்தில் களம் இறக்க வேண்டும் என்பதையும் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் இப்போது பயன்படுத்த வேண்டும் என்பதையும் பயிற்சியாளரும் கேப்டனும் சிறப்பான ஆலோசனை செய்து அணியை  நடத்தினாலே போதும்.

அந்த அணி பலம் வாய்ந்த அணியாக மாறும் அதை பல வருடங்களாக செய்து காட்டி அசத்திய அவர்கள் ரவிசாஸ்திரி மற்றும் விராட் கோலி. ஆனால் தற்பொழுது ரவி சாஸ்திரியின் பயிற்சியை ஆண்டு காலம் முடிவடைந்ததை அடுத்து அவருக்கு பதிலாகஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக பணியாற்றி பல்வேறு வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தவர். இந்த நிலையில் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை கூறியுள்ளார் அதில் அவர் கூறியது : இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைத்த சிலருக்கு என்னை சுற்றி இருந்தார்கள்.

இவர்கள் இந்திய அணி தோற்க வேண்டும் என நினைத்தார்கள் ஆனால் நாங்கள் வெற்றியை பரிசாக கொடுத்தோம். இதனால் அவர்கள் பொறாமை பட்டனர். தொடர்ந்து வெற்றியைப் பெற்றதால் அவர்கள் ஒரு கட்டத்தில் கடுப்பாகிறார் மேலும் இங்கிலாந்து செல்லும் முன்னரே என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வரப்போகிறது என்பதை உணர்ந்துவிட்டேன் 60 வயதாகிவிட்டது பயிற்சியாளர் குறித்து உச்ச நீதிமன்ற விதிமுறைகள் தனிமைப் படுத்துதல், கொரோனா பயோ பபுள் இருக்க முடியாது என்பதை அறிந்தேன்.

இரண்டாவது முறையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. நான் பிசிசிஐ அமைப்பை குறிப்பிடவில்லை அதற்குள் இருந்த சிலர் தான் முதலில் என்னை நிராகரித்துவிட்டு ஒன்பது மாதங்களுக்குப் பின் என்னை அழைத்து பயிற்சியாளர் பதவியை கொடுத்தனர் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நான் பயிற்சியாளராக வரக்கூடாது என விரும்பினார் ஆனால் என்ன செய்வது இதுதான் வாழ்க்கை என அவர் கூறி தெரிவித்தார்.