ஒரே ஒரு சீன் தான் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் ஏஜென்ட் டீனா..! கெத்து காட்டும் கூட்டணி..!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஏஜென்ட் டீனா மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இதற்கு முன்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குரூப் டான்ஸ் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நமது நடிகை கலா மாஸ்டர் பிருந்தா மாஸ்டர் போன்றவர்களுடன் பணியாற்றியது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தினேஷ் மாஸ்டருடன் இவர் தன்னுடைய பணியை தொடர்ந்துள்ளர்.

இவர் இந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் கமலை பார்த்தவுடன் நமது நடிகைக்கு நடிப்பே வரவில்லை என்று பல பேட்டியில் கூறியுள்ளார் ஆனால் லோகேஷ் கனகராஜ் கொடுத்த நம்பிக்கையின் மூலமாக தான் இவர் இந்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இவர் ஏஜென்ட் டீனாவாக மாறும் காட்சிகளில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரம்மாண்ட சண்டை காட்சி என்றால் அது  மீனாவின் சண்டைக்காட்சி என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்தது மட்டும் இல்லாமல் இதன் மூலமாக அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் ஆகிவிட்டது.

அது மட்டுமில்லாமல் தற்பொழுது மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் ஒன்றில் நமது ஏஜென்ட் டீனா நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்கள் கதாநாயகனாக நடித்த வருகிறார். அந்த வகையில் ஏஜென்ட் டீனாவுடன் மம்முட்டி ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment