அஜித் வலிமை திரைப்படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டு தற்போது ரெஸ்ட் என்ற பெயரில் இந்தியாவை சுற்றி பைக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறார் மேலும் அவர் முக்கிய இடங்களில் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்து வருகிறார்.
அது தீயாய் பரவி வருகின்றன இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் வலிமை படத்திலிருந்தும் புகைப்படங்களும் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கின்றனர். வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என போனிகபூர் சொல்லி இருந்தாலும் சரியான தேதியை இன்னும் அவர் குறிப்பிடாமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இது இப்படி இருந்தாலும் படக்குழு இனி ஏன் தாமதம் பண்ண கூடாது என்பதற்காக போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கி தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் பல வில்லன்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. கார்த்திகேயாவை தவிர இரண்டு, மூன்று வில்லன்கள் இருப்பத்தாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் டப்பிங் கலைஞர் அலெக்சாண்டர் வலிமை படத்தில் ஒரு வில்லன்னுக்கு டப்பிங் கொடுத்துள்ளதாக அவர் கூறி உள்ளார் ஆனால் அவர் யாருக்கு கொடுத்து உள்ளோம் என்பதை மென்ஷன் பண்ணவில்லை என்றாலும் வில்லனுக்கு குரல் கொடுத்திருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அலெக்சாண்டர் இதுவரை பல holloywood படங்களில் பல பிரபலங்களுக்கு டப்பிங் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை படக்குழு கார்த்திகேயனை மட்டும் வில்லனாக காண்பித்துள்ளது மற்ற வில்லன்களை ட்ரைலர் அல்லது டீசரில் காட்ட வாய்ப்பு இருந்தாலும் இருக்கும் என கூறப்படுகிறது ஆக மொத்தத்தில் அஜித் பல வில்லன்களுடன் சண்டை போடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.