“வலிமை” படம் அஜித்துக்காக எழுதப்பட்ட கதையை கிடையாதாம் – நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ஹச். வினோத்.!

ஹச். வினோத் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த மூன்று  படங்களுமே வெற்றியை ருசித்த காரணத்தினால் நான்காவது படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதுவும் இந்த படத்தில் அஜித் நடிப்பதால் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கின்றது.

இவர்களுடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு மற்றும் பல அட்டாக் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்த வண்ணமே படக்குழு இருப்பதால்  AK ரசிகர்கள் மற்றும் மக்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஹச். வினோத் சமீபகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் கலந்துகொண்டு  வலிமை படத்தை பற்றி சொல்லி வருகிறார். அதில் ஒன்றாக ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் வினோத் பேசியது : நிறைய கதைகளை வைத்திருந்தாராம் ஆனால் அதில் ஒரு கதையை அஜித்திடம் கூறியுள்ளார்.

அஜித்துக்கு அந்த கதை ரொம்ப பிடித்து இருந்ததால் சில மாற்றங்களை செய்து அந்த கதையை எடுக்கப்பட்டதாம் மேலும் அந்த படத்தின் கதைக்கு வலிமை என பெயர் சூட்டப்பட்டுள்ளது ஆனால் உண்மையில் அந்த படத்தின் கதையை வேறு ஒரு நடிகருக்காக தான் எழுதி இருந்தாராம்.

ஆனால் யாருக்காக இந்த படத்தின் கதையை எழுதினார் என்பதை மட்டும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார் மேலும் அஜித்திற்காக வலிமை படத்தின் கதையில் சிறு மாற்றத்தைச் செய்து போலீஸ் கதாபாத்திரத்தை அதன் பிறகு தான் கொண்டு வந்ததாக கூறினார். இச்செய்தியை தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment