நடிகர் தனுஷ் இளம் வயதிலேயே சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றியை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமையான நடிப்பு இருந்தாலும் சிறந்த கதைகளுமே அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட தனுசு தனது அண்ணனுடன் சேர்ந்து ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்தார்.
போகப்போக சிறந்த இயக்குனர்களை சரியாக தேர்ந்தெடுத்து நடித்தார் அந்தக் காரணத்தினால் தனுஷின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது சமீபத்தில் கூட இவர் நடிக்கும் திரைப்படங்கள் கதைகள் வித்தியாசமாக இருப்பதோடு தனுஷ் நடிப்பு வேற லெவல் இருப்பதால் அதை திரைப்படங்களில் அதிக நாட்கள் ஓடுடியதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையை அள்ளுகின்றன.
கடைசியாக தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்ததன் காரணமாக மற்ற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன அந்த வகையில் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் தற்பொழுது கால்தடம் பதித்து வெற்றியை கொடுக்கிறார்.
இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் தனது குடும்பத்துடன் அழகாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட தனது மாமனாரின் அண்ணாத்த படத்தை கூட திரையரங்கில் நடிகர் தனுஷ் பார்த்து கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. போதாக்குறைக்கு தீபாவளி பார்ட்டி ஒன்றை வீட்டில் ரெடி செய்து தனது நண்பர் மற்றும் திரையுலக பிரபலங்களை கூப்பிட்டு தற்போது கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. தனுஷுடன் வைபவ், கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.
