சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் இருக்கு.. நடிகை பிரியா பவானி சங்கரின் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர்கள் ஏராளம் அந்த லிஸ்ட்டில் உள்ளவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

2023 ல் கூட இவருக்கு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது கைவசம் பத்து தல, டிமான்டி காலனி 2, ருத்ரன், zebra, இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் இது தவிர dootha என்ற வெப் சீரிஸ் நடித்து வருகிறார் இதில் முதலாவதாக சிம்புவுடன் கைகோர்த்து இவர் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளதால் இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது படத்தில் இவர்களுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்ரா, கலையரசன், சென்ராயன், redin kingsey, சந்தோஷ் பிரதாப்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்  குறித்து பேசி உள்ளளார். நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் போதிலிருந்து தற்பொழுது வரை யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை..

எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது நான் இல்லை என்று சொல்லவில்லை என நடிகை பிரியா பவானி சங்கர் பேசிஉள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.