அஜித்தின் வலிமை படத்தில் மொத்தம் இத்தனை பாடல்கள் தான்.? வெளியான சூப்பர் தகவல்.

நடிகர் அஜித் ரசிகர்களை கவரும் படியான திரைப்படங்களை சமீபகாலமாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இளம் இயக்குனரான ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் இரவு /பகல் பார்க்காமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனால் இன்னும் குறுகிய நாட்களிலேயே படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என தெரியவருகிறது.

படப்பிடிப்பு தளத்திலிருந்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மர்மமாக வைத்திருக்கின்றனர் இருப்பினும் படத்தில் பணியாற்றும் பிரபலங்கள் பலரும் மறைமுகமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இதுபோன்ற நேரத்தில் தான் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்தும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

தர லோக்கல் பாடல் 1, குடும்ப பாடல் 1, ரொமான்டிக் பாடல் 2, ஒரு தீம் மியூசிக் 1 இருக்கும் என தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது.

Leave a Comment