அனிருத் இசையமைத்த பாடலில் தவறுகள் இருக்கிறது – சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன்.! இப்படியே விட்டா கெட்ட வார்த்தை வரும் ..

இசையமைப்பாளர் அனிருத்தும் தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அனிருத் பாடிய பாடல் குறித்து ஒரு சூப்பரான பதிவு ஒன்றை செய்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்  சுப்பிரமணியபுரம், நாணயம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து தன்னைப் பலப்படுத்திக் கொண்டு மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் சில படங்கள் மற்றும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து சில தகவல்களை பகிர்வது வழக்கம் இதன் மூலமாக அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து ஓடி கொண்டிருந்த இவர்  திடீரென தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கும் அனிருத் பாடிய பாடல் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள கருத்தவெல்லாம் கலிஜா என்ற பாடலை அனிருத் பாடி இசையமைத்து இருப்பார். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை போட்டியாளர் சமீபத்தில் இந்த பாடலை பாடி உள்ளார் அந்த பாடல் வரிகளில் தக்கலி என்ற வார்த்தை அவ்வப்போது வரும் நிலையில் அந்த வரியை மட்டும் அந்தப் பெண் குழந்தை அழுத்தமாக பாடியுள்ளார்

இந்த பாடல் காட்சியை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர்களும் இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத்தும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தக்கலி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை என்பது பல ஆண்களுக்கு தெரியும் அதனை அழுத்தமாக ஒரு ரியாலிட்டி ஷோவில் அந்த குழந்தை பாடும் பொழுது பெற்றோரும் ரசித்து பார்க்கின்றனர்

இந்த நிலையில் இது போன்ற இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் நிறைய எழுதி பதிவு செய்யுங்கள் அர்த்தம் தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் இதனை ரசித்து பாடி மகிழட்டும் என அனிருத்தை சாடியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். இவர் சொல்வது போல அண்மைக் காலமாக பல பாடல்கள் அர்த்தமில்லாமல் வரிகளை சரியாக உணராமல் பலரும் மேடையேறி பாடி வருகின்றனர்.

Leave a Comment