அஜித் நடித்த “நீ வருவாய் என” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவரா.? இயக்குனர் சொன்ன உண்மை

தேவயானியின் கணவர் ராஜகுமாரன் 1999 ஆம் ஆண்டு இயக்கி வெற்றி அடைந்த திரைப்படம் நீ வருவாய் என. இந்தப் படத்தில் பார்த்திபன், தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் கெஸ்ட் ரோலில் அஜித் குமார் நடித்திருந்தார். படம் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக இந்த திரைப்படம் கவர்ந்திழுத்தது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நீ வருவாய் என படத்தின் இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அப்பொழுது அவர் பேசியது : நீ வருவாய் என படத்தின் கதையை முதலில் நடிகர் விஜயுடம் நான் சொன்னேன்.

ஆனால் அப்போது கதையை வேறு மாதிரியாக சொன்னதால் படத்தின் கதை அவருக்கு பிடிக்காமல் போனது. படம் வெளிவந்து பின் விஜய் படத்தை பார்த்துவிட்டு நீங்கள் என்னிடம் வேறு மாதிரியாக கதையை சொல்லிவிட்டு படத்தை வேறு மாதிரி விறுவிறுப்பாக எடுத்துள்ளீர்கள் என கூறி இருந்தாராம் நடிகர் விஜய்.

நடிகர் தேவயானியின் கணவர் சினிமா உலகில் இயக்குனராக மட்டும் வலம் வராமல் நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தளபதி விஜயுடன் இணைந்து பூவே உனக்காக திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகுமாரன் முதலில் நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்டு பின் இயக்குனராக வலம் வந்தவர் என்பது தான் உண்மை. பூவே உனக்காக படத்தில் நடித்துவிட்டு பின் தான் அஜித், பார்த்திபன், தேவயானி ஆகியோர்களை வைத்து நீ வருவாய் என படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment