தேன்மொழி சீரியல் ரசிகர்களுக்கு உச்சகட்ட சோகம்.!

கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகிறார்கள்.  அந்த வகையில் தற்போது கோரானாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் காட்டுத் தீ போல் பரவி வருவதால் கோடி கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதில் மிகவும் முக்கியமாக சினிமாவில் உள்ள பலர் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது  பிரபல விஜய் டிவியில் நடித்து வரும் பிரபலம் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது தேன்மொழி BA சீரியலில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்து வந்த குட்டி ரமேஷ் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இவருக்கு கொரோனாவால் உயிரிழ்ந்து உள்ளாரா இல்லை வேறு உடல்நலக் குறைவு என்று சரியாக தெரியவில்லை.  ஆனால் இன்று அதிகாலை  இறந்துள்ளார்.இதனை அறிந்த திரை பிரபலங்கள் ரசிகர்கள் என்று அனைவரும்  தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

RAMESH 3
RAMESH 3

இவ்வாறு தொடர்ந்து திரைப்பிரபலங்கள் இறந்து வருவதால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில் தற்பொழுது விஜய் டிவி ஓட்டி ரமேஷ் இறந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது.

Leave a Comment