தீரன் அதிகாரம் ஒன்று திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இந்த விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்.

தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் கார்த்திக் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள், இவர்கள் நடிகர்களை தாண்டி சிறந்த மனிதர்கள் என கூறலாம், ஏனென்றால் சினிமாவை தாண்டி இவர்கள் நடத்தும் அகரம் பவுண்டேஷன் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள் இதனால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

படப்பிடிப்பு இல்லாமல் FEFSI ஊழியர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதனால் முதன் முதலாக சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினர் முன்வந்து 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்கள், இவர்களை தொடர்ந்து மற்ற பிரபலங்களும் உதவுவதற்கு முன் வந்துள்ளார்கள்.

நடிகர் சூர்யா தனக்கு வந்த திரைப்படத்தை தனது தம்பி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கூறி அவரிடம் கைமாறிய திரைப்படங்கள் உள்ளன. போலீஸ் அதிகாரி வாழ்க்கையை மையமாக வைத்து உண்மையான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் தான் அது.

இந்த திரைப்படத்தின் கதையை முதலில் ஹெச் வினோத் அவர்கள் சூரியாவிடம் தான் கூறினாராம், சூர்யா இந்த கதையில் தம்பி கார்த்திக் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என இந்த வாய்ப்பை கார்த்திக்குக்கு கொடுத்துவிட்டாராம்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் பிரீத் சிங் படைப்பில் வெளியாகிய தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Leave a Comment