தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை குவித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இத்திரைப்படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக ஒரு இயக்குனர் அவரை தொடர்ந்து பாலோ செய்து வருகிறாராம்.அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் துல்கர் சல்மான் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்.
இத்திரைப்படத்தினை தேசிங்கு பெரியசாமி அவர்கள் இயக்கியிருந்தார் இத்திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரக்சன்,ரித்து வர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இவ்வாறு வெற்றி திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு ரஜினியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
எனவே ரஜினிகாந்த்தும் அருமையாக படம் இருப்பதாகவும் பாராட்டினார். இவ்வாறு இது தகவல் அப்பொழுது அனைத்து ஊடகங்களிலும் வைரலானது.இந்த நிலையில் இவர்களின் சந்திப்பிற்கு பிறகு ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் ரஜினி சிறுதை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க சென்றிருந்தார். இதன் காரணமாக அடுத்த படத்தை நெல்சனுக்கு கொடுத்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் தேசிங்கு பெரியசாமியிடம் சூப்பர் ஸ்டாரை வைத்து நீங்கள் எப்பொழுது படம் இயக்குவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ரஜினிகாந்த் சாரை இயக்க வேண்டும் என்பது என்னுடைய பல நாள் கனவு ஆனால் அவருடன் என்னால் இணைந்து பணியாற்ற முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது கூடிய விரைவில் நானும் ரஜினிகாந்த் சாரும் இணைவோம் என கூறிவுள்ளார்.
மேலும் தேசிங்கு பெரியசாமி தற்போது சில திரைப்படங்களை இயக்கி வருவதால் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பையும் விரைவில் அறிவிப்பை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு தேசிங்கு பெரியசாமி அவர்களுக்கு விரைவில் சூப்பர் ஸ்டார் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.