இலங்கை வீரருக்கு ஏற்பட்ட மோசமான நிலை.. மைதானத்தில் உடைந்த 4 பற்கள், கிழிந்த உதடு..

srilanka
srilanka

இந்தியாவில் எப்படி ஐபிஎல் அதே போல ஸ்ரீலங்காவில் லங்கா பிரீமியர் லீக்கேஜ் என்ற 20 ஓவர் போட்டி வருடம் வருடம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த வருடத்திற்கான போட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் இருக்கின்றன. 1. Kandy falcons, 2. Jaffna kings, 3. Colombo stars, 4. Dambulla aura, 5. Galle gladiator..

இதில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் ஆனால் செமி பைனலுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு போட்டியின் போது ஆல் ரவுண்டர் சமிக கருணாரத்னே ஸ்லிப் திசையில் பில்டிங் செய்து கொண்டு இருந்தார் அப்பொழுது வந்த கேட்ச்சை பிடிக்க முயற்சி செய்தார்.

அப்பொழுது சிறு கவனக்குறைவால் பந்தை பிடிக்க முடியாமல் வாயில் வாங்கிக் கொண்டார். இதனால் மைதானமே சிறிது நேரம் அமைதியானது காரணம்.. அவர் வாயில் இருந்து ரத்தம் தண்ணி போல வந்தது வாயில் மிகவும் வேகமாக பந்து தாக்கியதால் பற்கள் நான்கு உடைந்து விழுந்தது மேலும் அவருடைய உதடு கிழிந்து தொங்கியது.

இதனால் போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறிய அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர் அப்பொழுது அவருக்கு முதலில் உடுடில் பத்து தையல்கள் போடப்பட்டது. இந்த மாதிரியான ஒரு மோசமான காயதை கிரிக்கெட் விளையாடும் பொழுது நாங்கள் பார்க்கவே இல்லை என மருத்துவர்கள் பேட்டி கொடுத்தனர்.

இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில்  வைரலாகி வருகிறது. விஷயத்தை அறிந்த ரசிகர்கள் அந்த வீரரை கிண்டலும், கேலியும் செய்து வருகின்றனர் மறுபக்கம் அவர் நலம் பெற்று மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர்.