பாகிஸ்தானை கதற கதற ஓடவிட்ட பெண் ஸ்ட்ரோக்.! T20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது அதிரடியாக களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர் பெண் ஸ்டோக்ஸ் பந்துகளை பவுண்டேரிகளாக விலாச இங்கிலாந்து அணியின் ரன் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.

மெல்போபர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஸ்பட்லர் தலைமையில் இங்கிலாந்த் அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் நேற்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்து  குவித்திருந்தது அதிகபட்சமாக ஷான் மசூர் 37 ரன்கள் சேர்த்தார் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்கள் சேர்த்தார்.

இதனை தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தல் இங்கிலாந்து அணி வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்  ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 26 ரன்கள் அடித்துள்ளார் அதன் பிறகு மறுமுனையில் அதிரடியாக ஆடிய பெண் ஸ்டோக்ஸ் பந்துகளை பவுட்ன்டிரிகலாக விளாசி உள்ளார். அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் ரன் ரேட் உயர்ந்தது.

ஹென்றி புரூக் 20 ரண்களில் ஆட்டமிழக்க மொயின் அலி 19 ரன்களில் விக்கெட்டை இழந்து உள்ளார். தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த ஸ்டோக்ஸ் அரை சதத்தை கடந்தார். இங்கிலாந்து அணி ஆறு பந்துகள் மீதும் இருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்த அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுச் சென்றது இறுதி போட்டியில் ஷாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர் நான்கு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் அது மட்டுமல்லாமல்  டி20 உலக கோப்பை 2022 இந்த ஆண்டு தொடரின் முழுவதும் சிறப்பாக பந்து வீசி 13 விக்கெடுகளை வீழ்த்தி சாம் கரன் தொடர் ஆட்டோ நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Leave a Comment

Exit mobile version