“கோலம் போட வந்த பெண்.. திடீரென நடந்த பயங்கரம்… நடந்தது என்ன.?”

0

“கோலம் போட வந்த பெண்.. திடீரென நடந்த பயங்கரம்… நடந்தது என்ன.?”
சீர்காழி அருகே வீட்டு வாசலில் கோலம் போட சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சீர்காழியில் உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சித்ரா ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இன்று காலையில் சித்ரா தனது வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த நிலையில் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரின் தலையில் பலமாக அடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் நகைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் அந்த மர்ம நபர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.