உலகநாயகன் கமல்ஹாசனாகவே மாறிய பெண்.! வியக்க வைக்கும் வீடியோ இதோ.!

தமிழ் திரை உலகில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தற்பொழுதும் நடித்துவரும் நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் இவரது திரைப்படங்கள் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு நிறைய திரைப்படங்கள் மக்களிடையே வெற்றி பெற்று இருக்கிறது. இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம் என்றே கூறலாம்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படத்தை எத்தனை முறை கூட பார்க்கலாம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு தந்தது மட்டுமல்லாமல் படத்தின் வசூல் எகிறி விட்டது.

இதனைத்தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தகவல் வெளியானது மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக அ.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறாராம்.இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வரும் கமல்ஹாசன் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு பெண் ஒருவர் கமல்ஹாசனை போல் மேக்கப் போட்டுக் கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்ரம் படத்தில் இருந்தது போலவே அழகாக மாறி உள்ளார் என்று இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் பெண்ணாக இருந்த ஒருவர் திடீரென்று கமல்ஹாசனாக மாறி காட்டி விட்டார் மிகவும் பிடித்திருக்கிறது என்று இவரை  பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/Cat__offi/status/1643637198774755331?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643637198774755331%7Ctwgr%5E05b54b6e8112cb10444a4701b73674fd7d9622cf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fgirl-look-alike-kamal-haasan-1680765885

Leave a Comment