“விடுதலை” படத்திற்காக மேலும் ஒரு இயக்குனரை களத்தில் இறக்கிய வெற்றிமாறன்.! படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்குது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனது படங்களின் மூலம் பல்வேறு விதமான விருதுகளையும் மற்றும் தேசிய விருதையும் குவிப்பு வைத்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

வெற்றி மாறன் புதுமுக நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார் கூட அந்தப் படங்களும் மாபெரும் வெற்றி பெறும் அந்த அளவிற்கு இவரது படைப்பின் மீதும்ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் இந்த நிலையில்தான் காமெடி நடிகர் சூரி வைத்து “விடுதலை” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது ஏனென்றால் திரை உலகில் வெற்றிமாறன் படங்கள் என்றால் டாப் நடிகர்களுடன் மற்ற படங்களை விட்டுவிட்டு இவரது படங்களுக்கு ஓடி வருவார்கள் ஆனால் இவரோ வித்தியாசமான கதையாக இருக்கும் என்பதால் காமெடி  சூரியை தேர்வு செய்து படத்தை எடுத்துள்ளார் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தில் இவருடன் இணைந்து விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.மாஸ்டர் திரைப்படத்தில் பவனியாக மிரட்டிய விஜய் சேதுபதி அது போல இந்த படத்திலும் ஒரு முக்கிய ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல்கள் கசிகின்றன.

இப்படியிருக்க இந்த திரைப்படத்தில் இன்னொரு டாக் இயக்குனரும் நடிகரும் இந்த படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.அவர் வேறு யாருமல்ல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தான் இவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் தற்போது படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment