ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் இவர்தான்.! கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்.

0
cook-with-komali-
cook-with-komali-

விஜய் டிவியில் மக்கள் பலரின் கவனத்தை திசைதிருப்பி சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் சற்று வித்தியாசமான முறையில் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இதில் போட்டியாளராக கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, ரோஷினி ஹரிப்ரியன், தர்ஷன், அரவிந்த் போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் கோமாளியாக புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா போன்ற மக்களுக்கு பிடித்த காமெடியர்கள்..

ஒவ்வொரு வாரமும் புதுப்புது கெட்டப்புகளில் வந்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் சினிமா துறையிலும் பிரபலமடைந்து மென்மேலும் உயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.  அதில் ஜட்ஜ் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் போட்டியாளர்களுக்கு சில வித்தியாசமான டிஷ்களை சமைக்க செய்து உள்ளனர். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனது சமையல் கலையை வெளிப்படுத்தி அருமையாகச் சமைத்துள்ளனர்.

அதில் செஃப் வெங்கடேஷ் பட் ஒரு டிஷை சாப்பிட்டுவிட்டு இதை நீங்கள் பைனல் நிகழ்ச்சியில் செய்து இருந்தால் நீங்கள்தான் டைட்டில் வின்னர் என கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன் போன்ற மூவரில் யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அந்த டைட்டில் வின்னர் யார் என எதிர்பார்த்து  வருகின்றனர்.