நீலகிரியில் நள்ளிரவில் அமைச்சர்களின் காரை வழிமறித்த காட்டு யானை…!

0

தற்பொழுது பெய்து வரும் பருவ மழையால் பல ஏரிகள்,குளங்கள்,அணைகள் நிறைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் விடாமல் பெய்த கன மழையால் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையில் உள்ளாட்சித்துறை எஸ் பி வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீலகிரிக்கு சென்று ஆய்வு செய்து விட்டு சென்றார்கள்.

இவ்வாறு அமைச்சர்கள் ஆய்வுகளை செய்து முடித்துவிட்டு மேட்டுப்பாளையத்துக்கு அருகில் உள்ள பர்லியார் வழியாக வந்து கொண்டிருக்கும் பொழுது காட்டு யானை ஒன்று வழி மறைத்ததால் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு அமைச்சர்கள் வந்த அனைத்து காருகளிலிருந்தும் ஒலி எழுப்பியதால் சிறிது நேரம் கழித்து யானை பயந்து காட்டுக்குள் சென்று விட்டது.