ரெடின் கிங்ஸ்லிக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மனைவி.. மனதை உருக வைத்த பதிவு

Redin Kingsley
Redin Kingsley

Redin kingsley : கோலமாவு கோகிலா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளினார் அந்த வகையில் டாக்டர் முதல்  ஜெயிலர் வரை பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து  பேரையும், புகழையும் சம்பாதித்தார் சினிமா அவருக்கு முக்கிய தொழில் கிடையாது.

ரெடின் கிங்ஸ்லி  பொருள்காட்சிகளை நடத்தி காசு பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட ரெடின் கிங்ஸ்லி 40 வயது கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர் திடீரென சீரியல் நடிகை சங்கீதாவை மைசூரில் திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் சிம்பிளாக முடிந்தாலும்..

ஹனிமூன் மாலத்தீவு, துபாய் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றி வருகின்றனர் ஒரு பக்கம் இவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க மறுபக்கம் இவரைப் பற்றிய செய்திகளை நோண்ட ஆரம்பித்தார்கள் அதாவது நடிகை சங்கீதா இதற்கு முன்பு கிரஷ் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின ஆனால் இது குறித்து உண்மையான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் சங்கீதா ஒரு சிறுமியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அதுதான் சங்கீதாவின் மகள் என பலரும்  என சொல்ல ஆரம்பித்தனர் இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி சங்கீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெடின் கிங்ஸ்லி புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் சொல்லி உள்ளது என்னுடைய மிகச்சிறந்த பாதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பையும், பாசத்தையும் என்னால் என்றுமே மறக்க முடியாது இதுபோன்று இன்னும் பல நாட்களைக் கொண்டாட வாழ்த்துகிறேன் என் அன்பு, அமைதி என அனைத்துக்குமே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.