நயன்தாராவின் நடிப்பை பார்த்துவிட்டு அசந்து போன பிரபல நடிகரின் மனைவி – இனி அந்த படத்திற்கு இவங்க தான் நடிக்க வேண்டும்.! சம்மதிப்பாரா.. லேடி சூப்பர் ஸ்டார்.? வெளியான சூப்பர் தகவல்.

சினிமா உலகில் ஒரு நடிகையை தொடர்ந்து ஹிட் கொடுக்க கொடுக்க தனது திறமையை வளர்ந்து கொண்டே  போவார்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அவர்கள் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுப்பார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா.

ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களின் படங்களில் கொஞ்சம் கொஞ்சம் தலை காட்டி வந்தாலும் அதன் பின் தனது நடிப்பு திறமையை முழுவதும் வெளிக்காட்டி அசத்திய இவருக்கு ஒரு கட்டத்தில் சோலோ படங்களில் முழு திறமையும் காட்டி நடித்து அசத்தி வருகிறார் நயன்தாரா.

தென்னிந்திய திரையுலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பாலிவுட்டில் லயன்  என்ற திரைப்படத்தில் நடித்து ஹிந்தியில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால் இடையில் ஷாருக்கான் மகன் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்திவிட்டார்.

இதனால் நயன்தாரா மற்ற படங்களின் கால்ஷீட் இதனால் பாதிக்கப்படும் என்பதால் இதிலிருந்து விலகிக் கொள்ளலாம் என முடிவு எடுத்திருந்தார் இப்படி இருக்கின்ற நிலையில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் அவர் நடித்த போர்ஷனை மட்டும் பார்த்து உள்ளார் பின் அவரே அசந்து போய் விட்டாராம் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நயன்தாரா.

இவரது நடிப்பு இந்தப் படத்தில் சிறப்பாக இருக்கிறது என்பதால் கௌரி கான் நயன்தாரா கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததை அடுத்து நயன்தாரா முடிவெடுத்து இந்த திரைப்படத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment