தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாஸ்டர் பட நடிகை வைரலாகும் புகைப்படம்.!

0

தமிழ் சினிமா உலகில் ரசிகர்களால் என்றும் தல என அழைக்கப்பட்டு வருபவர் அஜித்குமார் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மட்டும் முடியாமல் இருக்கிறது.

மேலும் தல அஜித்தின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது அன்று வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் தல அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என கூறியிருந்தார் ஆனால் ஒருசில காரணங்கள் குறித்து வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வில்லை இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருந்தார்கள்.

தல அஜித் பொதுவாகவே சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேஸ்,கார் ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.இதனையடுத்து தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகை என்ற பட்டத்தோடு வலம் வருபவர் சுரேகா.

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் அந்த காட்சி மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெறாமல் இருக்கும்.ஆனால் யூடியூப் சேனலில் டெலிட் செய்யப்பட்ட சீன்களில் இவர் நடித்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் சுரேகா தல அஜித்துடன் ஒரு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார் அது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்தை தல அஜித் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது எடுத்த புகைப்படமாக இருக்கிறது என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.