தமிழ் திரையுலகை நடிப்பின் மூலம் கட்டி ஆண்ட வில்லன் நடிகர்கள்.! லிஸ்ட் இதோ !!

ஒரு படம் மிகச் சிறப்பாக ஓட வேண்டும் என்றால் ஹீரோ, ஹீரோயின் போன்றவர்கள் இருந்தால் மட்டும் அது சிறப்பாக ஓடிவிட முடியாது. இந்த இரண்டு கதாபாத்திரத்தை போல முக்கியமான கதாபாத்திரமாக கருதப்படுவது வில்லன் கதாபாத்திரமும் தான். ஏனென்றால் ஹீரோவுக்கு எதிராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவது வில்லன்கள் தான் என்பது நாம் அறிந்ததே.

அதுவும் குறிப்பாக ஒரு சில நடிகர்களுக்கு இந்த வில்லன் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் உள்ளனர். தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்கள் அத்தகைய அணியில் எம்ஜிஆர், ரஜினி, விஜயகாந்த், மன்சூர் அலிகான் இவர்களின் கூட்டணி தமிழ் திரை உலகில் பலமான கூட்டணியாக திகழ்ந்து வருகிறது. இவர்களின் இன்றளவிலும் மக்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் நிலைத்து நின்று இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

1.எம் என் நம்பியார்.

தமிழ் சினிமாவில் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்கு பேர் போனவர்களில் முதன்மையானவர் எம் என் நம்பியார். 1950 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் திரை உலகில் முன்னணி வில்லனாக திகழ்ந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக இதில் எம்ஜிஆருக்கு ஏற்ற வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சாம்ராஜ்யத்தையே படைத்தார் நம்பியார். இவர் எம்ஜிஆருடன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் எம்ஜிஆருக்கு இணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.மன்சூரலிகான்

தனது வித்தியாசமான குரலின் மூலம் வில்லத்தனம் என்றால் என்ன என்பதை நிரூபித்தவர் மன்சூரலிகான். அதிலும் குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1990 காலகட்டங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது ஓர் இடத்தை தமிழ்சினிமாவில் நிலையாக பிடித்துக்கொண்டார்.

3.ஆனந்தராஜ்.

90 காலகட்டங்களில் மன்சூர் அலிகானுக்கு அடுத்தபடியாக சிறந்த வில்லனாக கருதப்படுபவர் ஆனந்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டு வில்லன் கதாபாத்திரம் என்றால் என்ன என்பதை தமிழ் சினிமாவிற்கு விளங்க வைத்தார். அதிலும் குறிப்பாக விஜயகாந்த், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் ஆனந்தராஜ்.

4.பிரகாஷ் ராஜ்.

தமிழ் சினிமாவில் படங்களில் வில்லனாக நடித்து தனது சிறந்த நடிப்பை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். காஞ்சிவரம் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார்.

5.ரகுவரன்.

தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றால் உடம்பு பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு சமயத்தில் கட்டாயமாக இருந்து வந்தது. அதனை உடைத்தெறிந்தவர் ரகுவரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒல்லியான உடம்பை வைத்து கம்பீரமான குரலின் மூலம் அதனை தவிடு பொடி ஆக்கினார். தமிழ் சினிமாவில் பேருக்கு பெயர் போனவர்கள் வெகுசிலரே அந்த வகையில் சிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ரகுவரன் என்பது குறிபிடத்தக்கது.

6.ராதாரவி .

தமிழ் சினிமாவில் தற்போது வரை வில்லனாக நிலைத்து நிற்பவர் ராதாரவி என்பது குறிபிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அரசியல் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக எந்த ஒரு கேரக்டரிலும் நடிக்கும் வல்லமை பெற்ற நபராக உள்ளவர் ராதாரவி. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7.சத்யராஜ்.

ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தாலும் இவருக்கென அமைந்தது வில்லன் கதாபாத்திரம். அதனை சரியாக பயன்படுத்தி தற்போது வரை வில்லனாக நடித்து வருகிறார் சத்யராஜ். திரையுலகில் சமீபகாலமாக அப்பா கேரக்டரில் பெரும்பாலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment