விஜய்சேதுபதியை தொடர்ந்து நடிகர் விஜயை அலறவிட காத்துக்கிடக்கும் வில்லன்.? விஜய் 65- ல் இவரா.?

நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், அர்ஜுன் தாஸ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

படம் திரையரங்கில் வெளிவந்து மக்களிடையே மாபெரும் பேராதரவைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து காண்பித்தது.

இதைத் தொடர்ந்து தனது அடுத்த படமான விஜயின் 65வது திரைப்படத்தை நெல்சன் இயக்க விஜய் நடிக்க உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் வித்யுத் ஜம்வால்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இவர் இதற்கு முன்பு விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி திரைப்படத்தில் நடித்து இருந்தார் இதை தொடர்ந்து இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளதால் படத்தின் இறுதி எதிர் பார்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இருப்பினும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

vidyuth jamal
vidyuth jamal

Leave a Comment