அதிரடியாக வெளியானது புஷ்பா 2 படத்தின் கிளிம்ஷ்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

இயக்குனர் சுனில் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2 இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது ஒரு வீடியோவை படகுழு வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோவில் புஷ்பா 2 திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டையும் வெளியிட்டு இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பிரித்து எழுதி தந்தது. இந்த படம் மட்டுமே கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி கொண்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் புஷ்பா படத்தின் பிலிம்ஸ் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டு இருக்கிறது.

இந்த வீடியோவில் புஷ்பா சிறையில் இருந்து தப்பி விட்டதாக தெரிகிறது அதுமட்டுமல்லாமல் அவருக்காக பல மக்கள் போராடுகின்றனர் புஷ்பா எங்கே?  போலீஸ் அராஜகம் ஒழிக என மக்கள் கூச்சலிட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சமே இருக்காத அளவிற்கு இயக்குனர் சுகுமார் இயக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் ஆக்சன் அல்லும் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த பிலிம்ஸ் வீடியோவில் பட குழு ஒரு அப்டேட்டையும் வெளியிட்டு இருக்கிறது அதாவது ஏப்ரல் ஏழாம் தேதி மாலை 4.05 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. அது புஷ்பா படத்தின் டிரைலர் அல்லது டீசராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலைகள் அவர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்க வெளியானது தான் இந்த வீடியோ.

இதோ அந்த வீடியோ…

Leave a Comment