தனது மனைவி என்று கூட பார்க்காமல் பங்கமாய் கலாய்த்த பரோட்டா சூரி வைரலாகும் வீடியோ.!

0

தமிழ் சினிமா உலகில் தனது காமெடி நடிப்பு திறமையால் ரசிகர்களை தற்போது வரை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வரும் நடிகர் தான் சூரி இவர் வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா திங்கும் போட்டியில் கலந்துகொண்டதால் அப்பொழுது இருந்து இவர் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

மேலும் சூரி நாட்டுப்புற கதையில் ஒரு திரைப்படம் எடுக்க இயக்குனர்கள் விரும்பினால் அந்த திரைப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் ஆசைப்பட அது தற்போது நடந்துள்ளது ஆம் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது அந்தப் பஸ்ட் லுக் போஸ்டரில் சூரி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சூரி தனது மகன்,மகளுடன் தனது திருமண புகைப்படத்தை காட்டி ஒரு கலாட்டா ஒன்று செய்கிறார்.ஆம் அது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறதுஅந்த வீடியோவில் சூரி தனது மனைவியை கிண்டல் செய்து வருகிறார் என்பது தெரியவருகிறது.