சென்னை ஏரியாவில் தொடர்ந்து மாஸ் காட்டும் வலிமை – 16 நாட்களில் அள்ளிய தொகை மட்டுமே இவ்வளவா.? ஆச்சரியத்தில் தமிழ் சினிமா.

ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டு செய்தாலும் அதை தான் செய்ததாகவே இருக்க வேண்டும் என எண்ணுபவர் நடிகர் அஜித்குமார் நிஜத்திலும் சரி சினிமாவிலும் சரி அந்த கொள்கையை வைத்துள்ளார். சினிமா உலகில் பல்வேறு ஆக்சன் காட்சிகளில் டூப் போட்டு நடிக்காமல் சொந்தமாகவே நடித்து அசத்துகிறார்.

மேலும் எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார். அதற்கு ஏற்றார்போல பலனும் கிடைக்கிறது அண்மைக்காலமாக நடிகர் அஜித்குமார் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை திரைப்படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வலிமை.

இப்படம் வெளிவருவதற்கு முன்பு பல தடைகளை சந்தித்தாலும் ஒருவழியாக முட்டி மோதிக்கொண்டு வெளியானது வெளிவந்து ரசிகர்களின் மனதையும் திருப்திப்படுத்தியது அந்த அளவிற்கு படத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் பொருந்தி இருந்தது. இப்பொழுது ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வலிமை திரைப்படம் கவர்ந்திழுத்து உள்ளதால் நாளுக்கு நாள் வசூல் வேட்டை நடத்திய வண்ணமே இருக்கின்றன.

வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடிக்கும் மேல் அல்லி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிமை திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் பெரும்பாலான திரையரங்குகளில் இன்னும் வலிமை படம் ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் வசூலை அள்ளி கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை ஏரியாவில் மட்டும் வலிமை திரைப்படம் 16 நாட்களில் எவ்வளவு உள்ளது என்பது குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி பார்க்கையில் வலிமை திரைப்படம் இதுவரை 9.5 கோடி சென்னை ஏரியாவில் மட்டும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இன்னும் இருக்கின்ற நாட்களில் நிச்சயம் 50 லட்சத்தை அள்ளி 10 கோடியை அந்த ஏரியாவில் மட்டும் தொடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment