வருகின்ற ஜூலை மாதம் தல மாதம்.. கொண்டாட ரெடியாக இருங்கள் அஜித் ரசிகர்களே – பிரபல இயக்குனர் தடாலடி.

0

தல வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது படத்திற்கான வரவேற்பு எப்போதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும் அது போலவே தான் ஹச். வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்திற்கும் அதிகமாக இருந்துவருகிறது.

வலிமை படக்குழு எப்பொழுது சூட்டிங்கை தொடங்கினார்கள் என்னவோ ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் தடங்களை சந்தித்து வருகிறது. படக்குழு ஒரு பக்கம் சுக்குநூறாக உடைக்கிறது என்றால் மறுபக்கம் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டை கேட்டு சமூக வலைதளங்களிலும் முக்கியமான இடங்களிலும்  குழுவினரை டென்ஷன் ஏத்தினர்.

இச்செய்தி ஒரு கட்டத்தில் அஜித்தை சென்றடைய வலிமை படத்தின் அப்டேட் படக்குழு வெளியிடும். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என அவருடன் நெருங்கி இருக்கும் நண்பர்கள் மற்றும் நடிகர்களுடன் கவலையாக தெரிவித்தார்.

இச்செய்தியை அறிந்து அந்த படத்தில் பணியாற்றும் ஒரு சிலர் வலிமை படத்தின் சில  தகவல்களை அவ்வப்போது சொல்லி வந்தனர். அது வேற லெவலில் கொண்டடாடிய நிலையில் மேலும் அப்டேட்களை ரசிகர்கள் கேட்க தொடங்கினார்.

இது பத்தாமல் மேலும் ரசிகர்கள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளனர். இதுக்கு படக்குழு விரைவில் வரும் என கூறிய  நிலையில் பிரபல இயக்குனர் மோகன்ஜி அவர்கள் வலிமை படம் குறித்து தற்போது ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார் அவர் கூறியது.

தல ரசிகர்களே ஜூலை மாதம் தல மாதம் அதைக் கொண்டாட ரெடியாக இருங்கள் பத்து நாட்கள் திருவிழா போல இருக்கும் எனவும் தெரிவித்தார் இச்செய்தி தற்பொழுது இணையதளப்பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.