சந்தானத்தின் “சபாபதி” படத்தில் நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை யார் தெரியுமா.? வெளிவந்த சூப்பர் தகவல்.

sapapathy
sapapathy

சின்னத்திரையில் பயணிக்கின்றன நடிகைகள் பலரும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து மக்களை கவர்கின்றனர். அந்த வகையில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி யில் நடிக்கின்ற பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் தற்போதைய கால்தடம் பதித்து செம மாஸ் காட்டி வருகின்றனர். சின்னத்திரையில் பக்கத்தில் இருந்து பலர் போயுள்ளனர்.

அதிலும் குறிப்பாக சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், ஷிவானி நாராயணன், VJ மகேஸ்வரி, அனிதா சம்பத் அவர்களின் திறமை சிறப்பாக வெளிப்படுத்திய காரணத்தினாலேயே  இவர்களை வெள்ளித் திரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சினிமா பக்கம் இழுத்து போடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பல பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பக்கம் நடித்து தற்போது உச்ச நட்சத்திரங்களாக பயணிக்கின்றனர். அவர்களில் ஒருவராக தற்பொழுது பயணித்து உள்ளவர் தான் விஜய் டிவி சீரியலில் பிரபலம் நடிகை வைஷ்ணவி அருள்மொழியும் சினிமாவில் நுழைந்து உள்ளார்..

விஜய் டிவியில் மிகச்சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோவின் தங்கையாக மிகச் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு தற்போது வெள்ளித்திரை பக்கம் வாய்ப்புகள் கிடைத்து உள்ளது.

ஆம் முதலில் இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “சபாபதி” படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்து அசத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைஷ்ணவி அருள்மொழி விஜய் டிவி தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக கலர்ஸ் தொலைக்காட்சியில் மலர் என்ற சீரியலிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.