சிம்புவின் “மாநாடு” படத்தில் இருந்து வெளியான இரண்டு லேட்டஸ்ட் புகைபடங்கள்.! யார் யார் இருக்கிறார்கள் பாருங்கள்.

0

சமீபகாலமாக சினிமாவுலகில் அதிரடியான மாற்றங்கள் பல நடந்து உள்ளன. அதில் ஒன்றாக பெரிதும் பார்க்கப்படுவது நடிகர் சிம்புவின் மாற்றம் இவர் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்த பிறகு தொடர் படங்களில் நடிப்பதோடு குறித்த நேரத்தில் அந்த படத்தை முடித்து கூடுக்கவும் தயாராக முனைப்பு காட்டி வருகிறார் அந்த வகையில் வெறும் 40 நாளில் ஈஸ்வரன் திரைப்படத்தை எடுதுகொடுக்க உதவினார்.

அதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த தொடர் படங்களில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் ஏற்கனவே மாநாடு என்ற திரைப்படத்தில் இணைந்தார் அந்த படம் தற்போது முழு நேரமாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் இப்படி தொடர் படங்களில் நடிப்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்க ரெடியாக உள்ளார் சிம்பு. இப்படி இருக்கின்ற நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் அரசியல்வாதிகளாக ஒய் ஜி மகேந்திரன் எஸ்.எ. சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. சிம்புவுடன் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

அந்த வகையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி, பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, அரவிந்த் ஆகாஷ், டேனியல் போன்றோரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது. இவர்களுடன் இந்த இரண்டு நபர்களும் அரசியல்வாதியாக நடிப்பதால் படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர் இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு திரைப்படத்தை கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்து சரி ஆகிவிட்டால் வரும் ஜூன் மாதத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு கூறப்படுகிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப இந்த படம் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து கிடைக்கும் என்றால் சிம்பு தனது ரசிகர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய ரெடியாக இருப்பார் என்பதால் இதையும் தனது ரசிகர்களுக்காக பொறுமை காத்து செய்வார் என்று தெரியவருகிறது.