பல வருடங்களுக்கு முன்பு அஜித்துடன் நடித்த நடிகை இப்பொழுது சன் டிவி சீரியலில்.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜித் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருவது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் எப்போது வெளியாகும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் கூடிய சீக்கிரம் முடிய உள்ளது மேலும் தல அஜித்துடன் இணைந்து நடித்தால் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விலங்கி விடலாம் என பல நடிகைகள் அஜித்தின் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் அஜித்துடன் இணைந்து நடித்த பல நடிகைகளும் தற்போது சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் தான் இருக்கிறார்கள் இந்நிலையில் அஜித்திற்கு தங்கையாக நடித்த நடிகை தான் ஸ்வேதா பந்தேகர். இவர் அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார் திரைப் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து இவர் வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஆனால் இந்த திரைப்படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை இருப்பினும் இவர் தெலுங்கு படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் தெலுங்கில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து புகழ்பெற்று விளங்கி விட்டார் இதனைத் தொடர்ந்து தமிழில் பூலோகம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஆனால் இந்த திரைப்படமும் இவருக்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இவரைப் பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறாராம் ஆம் இவர் பிரபல சன்டிவி தொலைக்காட்சியில் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்துள்ளாராம் இந்த சீரியல் மூலம் இவர் மீண்டும் சின்னத்திரை நாயகியாக வலம் வருகிறாராம்.

shwetha bandekar
shwetha bandekar

மேலும் இந்த சீரியலில் இவரது நடிப்பை பார்ப்பதற்காக பல ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த நிலையில் இவர் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறாராம் இவ்வாறு வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் கலக்கி வரும் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பாரா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment