விமர்சனங்களைத் தாண்டி புதிய சாதனை படைத்த “அண்ணாத்த” படத்தின் டிரைலர்.? சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சும்மாவா..

ஆக்ஷன் காதல் சென்டிமென்ட் ஆகியவை ஒரே படத்தில் கலந்து இருந்தால் அந்த திரைப்படம் நிச்சயம்  ஹிட்டடிக்கும் என்பது வழக்கம் அது போன்ற பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போதும் கூட அதே பாணியை பின்பற்றுவதால் இவரது திரைப்படத்திற்கு இன்னும் மக்கள் கூட்டம் அலை அலையாக வருகின்றன. இப்படி இருக்க சிறுத்தை சிவாவுடன் ரஜினி முதல்முறையாக கைகோர்த்து  அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் வெகு விரைவிலேயே தீபாவளி அன்று வர இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

போதாத குறைக்கு இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா கீர்த்தி சுரேஷ் குஷ்பு மீனா சூரி போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் பாடல் ஆகியவை வெளி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த ட்ரெய்லரில் ரஜினியின் மாஸ் டயலாக் ஒவ்வொன்றும் வேற லெவல் இருந்தது ஆனால் இதைப் பார்த்த ஒரு சில ரசிகர்களோ சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து வீரம் விசுவாசம் ஆகிய படங்களின் ருடைய இந்தப்படத்திலும் பிடித்துள்ளார் என கூறிய கமெண்ட் அடித்தனர். ஆனால் ரஜினியின் நடிப்பிற்காக இந்த படம் ஓடும் என பலரின் கருத்தாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பல விமர்சனங்களையும் தாண்டி யூடியூபில் அண்ணாத்தா படத்தின் டிரைலர் முதல் இடம் பிடித்துள்ளது. ட்ரைலர் வெளிவந்த இரண்டு நாட்களே ஆன நிலையில் இதுவரை 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது

Leave a Comment