இணையத்தில் வைரலாகும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் ட்ரைலர்.!

காமெடி நடிகனாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் சந்தானம் இவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக நடிக்க ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது அதனால் இவர் தொடர்ந்து கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார் இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் டிக்கிலோனா இந்த திரைப்படம் வெளியானபோது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் இதனை பார்த்து சந்தானத்தை பாராட்டி வந்தார்கள்.

அதன் பின்பு சந்தானம் தற்போது சபாபதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை பற்றி சமீபத்தில் தான் ஒரு புதிய அப்டேட் வெளியாகிய நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது இதனை பார்க்கும் பொழுது சந்தானம் இத்திரைப்படத்தில் சபாபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இதில் அவருக்கு கொஞ்சம் வாய் திக்கும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் இருப்பதால் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் கூறி வருகிறார்கள் இதனால் ஒரு சில ரசிகர்கள் இந்த ட்ரைலரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி சந்தானம் நடிப்பை பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment