தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். காரணம் தளபதி விஜய் படத்தில் இப்போதும் ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்து இருப்பதால் அவரது படம் எப்பொழுதுமே வெற்றியை ருசிக்கும்..
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட அமோக வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்திய நிலையில் விஜய்யின் பீஸ்ட் படமும் அப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களை கவர்ந்த இழுக்க தவறியதால் தற்போது விஜய் கேரியரில் சற்று கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
‘இருப்பினும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 66 வது திரை படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது.
இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் எடுக்கப்படும் என தெரியவருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார். என்பது குறித்து தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதன்படி பார்க்கையில் தளபதி விஜயின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 410 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் பெரிதும் சினிமா வட்டாரங்களில் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.