80 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் தமிழ் சினிமா உலகில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினி இதுவரை அதிக ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மேலும் அதிக விருதுகளை பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு தவிர்க்க முடியாத..
ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க ரசிகர்கள் அனைவரும் இவரை செல்லமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என அழைப்பது வழக்கம். ரஜினி கடைசியாக சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் சூட்டிங் மிக விரைவிலேயே தொடங்கப்பட இருப்பதால் ரஜினி படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சினிமா உலகில் வெற்றியை கண்டாலும் குடும்ப விஷயத்தில் சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
ரஜினி இருப்பினும் அதிலிருந்து ரஜினி உடனடியாக மீண்டும் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த தற்போது படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் இதுவரை குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
அண்மைக்காலமாக நடிகர் நடிகைகள் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு பார்த்து வருகிறோம் அதுபோல இப்பொழுது ரஜினி குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது அதன்படி பார்க்கையில் ரஜினியிடம் சுமார் 410 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.