புலி படத்தில் நடிக்க “தளபதி விஜய்” வாங்கிய மொத்த சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா.? இப்ப அவரோட ரேஞ்சே வேற

0
puli
puli

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தோல்வியை சந்திக்காத இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் முடிந்ததை அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படத்தில் விஜய் வயதான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத்..

த்ரிஷா, ப்ரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  லியோ படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெறும் என படகேகுழு தகவல்களை சொல்லி இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் பற்றிய பழைய மற்றும் புதிய செய்திகள்..

இணையதள பக்கங்களில் உலவுவது வழக்கம் அதன்படி தளபதி விஜய் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புலி. இந்த படம் அரசர் காலத்து படமாக இருந்தது இந்த திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி,  தம்பி ராமையா, பிரபு, சுதீப் என பலர் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது இந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி புலி படத்தில் நடிக்க தளபதி விஜய் சுமார் 20 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.