வாரிசு படத்தில் வில்லனாக நடிக்க “பிரகாஷ் ராஜ்” வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
varisu
varisu

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார்,  பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பரா நடித்து அசத்துகின்றனர்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் போகப்போக குடும்ப ஆடியன்ஸ் வாரிசு படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் அதன் காரணமாக இந்த படம் பல்வேறு இடங்களில் நல்ல வசூலை அள்ளியது குறிப்பாக தமிழ், தெலுங்கு, கேரளாவில் ஏகப்பட்ட வசூல்..

இதுவரை மட்டுமே விஜயின் வாரிசு திரைப்படம் சுமார் 310 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தின் வெற்றி தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் இரவு, பகல் பார்க்காமல் விஜய் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் அவர் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

அவ்வபொழுது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க  பிரகாஷ்ராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில்.. வாரிசு படத்தில் நடிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் சுமார் 1 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.