வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க “ஜெயசுதா” வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

leo
leo

கடந்த சில வருடங்களாக விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கிறது அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம்  வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக இருந்தாலும்..

விஜய்க்காக இந்த படத்தில் ஆக்சன், காமெடி காட்சிகள் கொஞ்சம் இடம் பெற்றிருந்தன. படத்தில் விஜய் நடித்தது ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.  இதனால் வாரிசு படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புள்ளாக ஓடியது.

அதன் காரணமாக வாரிசு  படத்தின் வசூலும் அதிகரித்தன ஒரு வழியாக உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இந்த திரைப்படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வாரிசு படத்தை ஒண்ணுமே பண்ண முடியவில்லை..

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தில் நடிக்க விஜய் 70 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார் தொடர்ந்து இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பளங்கள் பற்றிய நாம் பார்த்து வந்தோம் அதுபோல தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயசுதா சுமார் 30 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறது.