கேப்டன் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? மிரண்ட ரசிகர் பட்டாளம்.!

90 காலகட்டத்தில் அதிக படங்களில் நடித்து அசத்திய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த் ஆரம்பத்தில் ஆள் பார்ப்பதற்கு கம்பீரமாக கிராமத்து ஆள் போல இருந்ததால் பெரிதும் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால் அந்த படம் அவருக்கு வெற்றியை பெற்றுத்தந்தன.

ஒருகட்டத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த ரஜினி கமல் போன்றவர்களுக்கு ஈடு இணையாக வலம் வந்தார் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், வல்லரசு, நரசிம்மா போன்ற ஆக்ஷன் படங்கள் இவருக்கு மேலும் மேலும் புகழைத் தேடித் தந்தது.

ஒருகட்டத்தில் கமல் ரஜினியை ஓவர்டேக் செய்து ஓடிக் கொண்டிருந்தார் ஆனால் நாட்கள் போக போக கேப்டன் விஜயகாந்த் திடீரென அரசியல் பிரவேசம் கண்டார். அதிலும் வெற்றியை நாடினாலும் இப்பொழுது உடல்நலக்குறைவு காரணமாக முழு ஈடுபாட்டுடன் அரசியல் செய்ய முடியாமல் இருந்து வருகிறார். இப்போது உடலை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறார்.

விஜயகாந்த் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து அவரது சினிமா நண்பர் சரத்குமாரும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை பிடிக்காத மனிதன் படத்தை ரசிகர்களும் மக்களும் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் 40அல்லது 50 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment