ரஜினியின் மூத்த மகள் “ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்” முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி. இப்பொழுது கூட இவர் நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவரைத் தொடர்ந்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா உலகில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவர் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி நடித்து அசத்தி வரும்  நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் வியாகிரா என இரு மகன்கள் உள்ளனர்.

இப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் 18 வருடங்களுக்கு பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். ஐஸ்வர்யா இந்த பிரச்சனையிலிருந்து தன்னை முழுவதும் மாற்றிக்கொள்ள தற்போது படங்கள் இயக்குவது மற்றும் ஆல்பம் பாடல் போன்றவற்றை ரெடி செய்து வருகிறார்.

குறிப்பாக படங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இவர் இதுவரை 3, வை ராஜா வை, போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இப்பொழுதும் படங்களை இயக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா இவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் ஐஸ்வர்யா கையில் சுமார் 30 அல்லது 40 கோடி மதிப்பு சொத்து இருக்கும் என கூறப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும்  சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment