வெற்றிகளை அள்ளிக் குவிக்கும் இளம் இயக்குனர் அட்லீயின் “முழு சொத்து” மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி பின் திரைஉலகில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் அட்லீ. முதல் படத்திலேயே நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா போன்ற டாப் நடிகர், நடிகைகளை வைத்து ராஜா ராணி என்னும் படத்தை உருவாக்கியிருந்தார்.

இந்த படம் காதல், சென்டிமென்ட், காமெடி, ரொமாண்டிக் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை முதல் படத்திலேயே பதித்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.

விஜயை வைத்து இவர் மூன்று படங்களை இயக்க உள்ளார் அந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் அடங்கும். அதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லீ தன்னை பாலிவுட் பக்கம் திசை திருப்பியுள்ளார்.

ஹிந்தியில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கானை வைத்து லயன் என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஹீரோயின்னாக நயன்தாரா நடிக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக மும்பை மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அட்லீ.

குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் அட்லீயின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 50 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment