அண்மைகாலமாக டாப் நடிகர்கள் கூட சிறப்பான படத்தை கொடுக்க தட்டுத்தடு வருகின்றனர் ஆனால் ஒரு பக்கம் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்துகிறார். அதுவும் கடந்த இரண்டு படங்கள் சுமார் 100 கோடி கிளப்பில் இணைவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளிய நிலையில் அண்மையில் சிபிச்சக்கரவர்த்தி உடன் கைகோர்த்து அவர் நடித்த திரைப்படம் டான் இந்த படமும் 12 நாட்களில் மட்டுமே சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. வருகின்ற நாட்களிலும் டான் திரைப்படம் நல்ல வசூலை அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து ப்ரியகங்கா அருள் மோகன் நடித்தார். மற்றும் எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சிவாங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் படங்கள் தொடர்ந்து வசூல் நடத்துவதால் விஜய் அஜித்திற்கு நிகராக தற்போது பேசப்பட்டு வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்மைகாலமாக சினிமா நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து பார்த்து வருகிறோம் அதுபோல தமிழ் சினிமாவின் அண்மைக்காலமாக வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்பது குறித்தும் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.