வெற்றி நாயகன் சூர்யாவின் “மொத்த சொத்து மதிப்பு” இத்தனை கோடியா.? மிரண்டுபோன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சூர்யா..  ஆரம்பத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிய இவருக்கு இன்று பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கதை சொல்ல காத்துக் கிடக்கின்றனர் அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது ஏன் கடைசியாக இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம்..

போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் ஒரு சரித்திர கதையாக உருவாகி வருகிறது மேலும் இதில் சூர்யா பல கெட்டப்புகளில் நடிக்கிறார் எனவும், 16 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

Surya 42 படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி, யோகி பாபு, கோவை சரளா, சூர்யா சிவகுமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் அடுத்ததாக சுதா கோங்கரா உடன் ஒரு படம் என அடுத்தடுத்த டாப் இயக்குனர்களை சூர்யா கூறி வைத்துள்ளதால்..

அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைகாலமாக டாப் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து பார்த்து வருகிறோம் அதன்படி தற்பொழுது நடிகர் சூர்யா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு சுமார் 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

சென்னை மற்றும் பல நகரங்களில் சூர்யாவுக்கு என பிரம்மாண்டமான சொகுசு வீடு மற்றும் விலை உயர்ந்த கார் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள வளசரவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் இவருக்கு இருக்கின்றன சூர்யாவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 186 கோடி இருக்கும் என நான் சொல்லப்படுகிறது.

Leave a Comment