4 நாட்கள் முடிவில் வாரிசு, துணிவு திரைப்படம் அள்ளிய மொத்த வசூல் நிலவரம் இதோ

விசேஷ நாட்களில் டாப் ஹீரோகளின் படங்கள் இறங்குவது வழக்கம் அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு, தளபதி விஜயின் வாரிசு திரைப்படங்கள் மோதியுள்ளன. இரண்டு திரைப்படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.

அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி மற்றும் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம்பெற்று இருந்ததன. இதனால் இந்த படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றன. அதன் காரணமாக நாளுக்கு நாள் துணிவு படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

மூன்று நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் 42 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்த நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி உள்ளது. இதுவரை துணிவு திரைப்படம் ஒட்டுமொத்தமாக நான்கு நாட்கள் முடிவில் இதுவரை உலக அளவில் 100 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. அதேபோல விஜயின் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியது.

இந்த படத்தில் விஜய் செம்ம எனர்ஜியாக நடித்துள்ளார் அதுவே விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. வாரிசு படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதன் காரணமாக நான்கு நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 100 கோடி கடந்து மாபெரும் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் கடந்து இருந்தாலும்.. சிறு வித்தியாசத்தில் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் வசூல் கம்மியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment