முடிவுக்கு வந்தது வாத்தி படத்தின் மொத்த வசூல்.. எத்தனை கோடி தெரியுமா.?

தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியது. இந்த படம் இந்திய கல்வியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெளிவந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சம்யுக்தா, சுமந்த், கருணாஸ், பி சாய் குமார், தணிகெல்ல பரணி, ஹைப்பர் ஆதி, ஷரா, ஆடுகளம் நரேன், ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா போன்ற பலரும் சிறப்பாக நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் அதிலும் குறிப்பாக “ஒரு தல காதல தந்து” என்ற பாடல் சிறப்பாக வந்துள்ளது.

தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் தான் ட்ரெண்டிங்காக இருக்கின்றன. மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்தனர் மற்றும் போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிக வசூலை அள்ளியதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.

தனுஷ் ரசிகர்களும் இந்த படத்தினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.  இந்த நிலையில் வாத்தி படம் இதுவரை எவ்வளவு வசூலை அள்ளி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது அதன்படி ஒரு மாதத்தில் பாக்ஸ் ஆபீஸில் 118 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாத்தி படம் ஒரே மாதத்தில் இவ்வளவு வசூல் அள்ளியது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து தனுஷின் மார்க்கெட் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் அடுத்தடுத்த படங்களுக்கு தனது சம்பளத்தை பல மடங்காக உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment