ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? லாபம் மட்டுமே இத்தனை கோடியா.?

jailer
jailer

Jailer collection: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிஸ்டர் ஹிட் அடித்து இருக்கும் நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த்திற்கு விலை உயர்ந்த காரை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடிவுள்ளார்.

பொதுவாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறுவது வழக்கம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட ரஜினிகாந்திற்காக ஏராளமான ரசிகர்கள் படத்தினை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு குடும்பத்துடன் வருகின்றனர்.

அப்படி ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் படம் தோல்வினை அடைந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் உலக அளவில் ரூபாய் 600 கோடியை கடந்து வசூல் சாதனையை படைத்திருப்பதாக ஏற்கனவே வெளியானது.

இவ்வாறு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அப்படி தற்பொழுது 25 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இதுவரையிலும் ரூபாய் 610 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இதன் மூலம் தயாரிப்பாளருக்கு ரூபாய் 250 கோடிக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே ப்ரீ பிசினஸ் செய்யாதன் மூலம் ரூபாய் 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கிறதாம்.

எனவே இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன் ரஜினி மற்றும் நெல்சனுக்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திரையரங்கங்களை தொடர்ந்து ஜெயிலர் படம் வருகின்ற 7ம் தேதி அன்று ஓடிக்கொண்டிருக்கும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.